Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 64 ஆயிரத்து196 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Business Directory

அத்தோடு கொரோனா தொற்றினால் இதுவரை ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்து 960 ஆக பதிவாகியுள்ளது என சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,724 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 45 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அங்கு அதிகளவாக ஒன்ராறியோவில் 2 இலட்சத்து 99 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6,960 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு கியூபெக் மாநிலத்தில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 3 பேர் நோயாளிகளாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கு 10 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.