Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் இரண்டு இலட்சத்து 52பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக பத்து ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 422பேர் பாதிக்கப்பட்டதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 003பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 218பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.