Reading Time: < 1 minute

ஒட்டாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள கார்ப் விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

Tamil Business Directory

திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில், தாமஸ் ஆர்க்யூ ரோட்டில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவசரகால மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விமானத்தில் இருந்த இரண்டு பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர்களுக்குப் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்துக்கான காரணத்தை ஊடகங்களிடம் விளக்கியது.

செஸ்னா 150எம் (Cessna 150M) ரகத்தைச் சேர்ந்த அந்தச் சிறிய விமானம், ஓடுதளம் 28-இல் (Runway 28) தரையிறங்க முயன்று மீண்டும் மேலே எழும்பியபோது (Go-around), திடீரென அதன் என்ஜின் இயக்கம் நின்றது.

இதனால் சுதாரித்துக்கொண்ட பைலட், விமானத்தை ஓடுதளம் 04-இல் (Runway 04) தரையிறக்க முயன்றார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அருகில் இருந்த புல்வெளியில் தரையிறங்கியது. இதில் விமானத்தின் முன் சக்கரம் (Nosewheel) உடைந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாகக் கார்ப் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.