Reading Time: < 1 minute

கனடாவின் யார்க் பிராந்தியத்தில் (York Region) தொடர்ச்சியாக நடைபெற்று வரும் “கவனச்சிதறல் நகை திருட்டுகள்” குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஒரே சந்தேக நபர்கள் மார்க்ஹாம் பகுதியில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குடியிருப்பு பகுதிகளில் வாகனத்தில் சுற்றித் திரிந்து, தெளிவாக நகை அணிந்தும் தனியாகவும் இருக்கும் நபர்களைத் தேடி இலக்காக்குகின்றனர்.

குறிப்பாக முதியவர்களே அதிகமாக குறிவைக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்த பிறகு, ஒருவரான சந்தேக நபர் அவர்களிடம் நடந்து சென்று அல்லது “வழி கேட்பது” போன்ற காரணம் கூறி வாகனத்துக்கு அழைத்து செல்வார்.

குறுகிய உரையாடலின் போது, பாதிக்கப்பட்டவரின் உண்மையான நகையை கழற்றி, அதன் பதிலாக போலியான தங்க வளையல், மோதிரம் அல்லது சங்கிலி போன்றவற்றை அணிவித்து விட்டு தப்பிச் செல்கிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் சந்தேக நபர், மளிகைக் கடை கார் நிறுத்துமிடங்களில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி உரையாடலைத் தொடங்கி, போலியான தங்க நகைகளை வழங்க முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் திருட்டை நிகழ்த்தியதும் காத்திருந்த சாம்பல் நிற ஹொண்டா கார் ஒன்றில் ஏறி, குழுவினர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்களில் எவருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நெருங்கி நின்று வழி கேட்பவர்கள் போன்றோரிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.