Reading Time: < 1 minute

கனடாவின் நோவா ஷ்கோஸியா மாகாணத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத புகையிலைப் பொருட்கள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வயது முதிர்ந்த ஆண் மற்றும் பெண் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

Royal Canadian Mounted Police (RCMP) அதிகாரிகள், Guysborough County மற்றும் Antigonish County பகுதிகளில் நடைபெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜேம்ஸ் ரிவர் பகுதியில் இலக்கு வைத்து வாகன சோதனை மேற்கொண்டனர்.

அந்த வாகனம் ஒன்றாரியோ மாகாணத்திலிருந்து கான்சோ நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது.

சோதனையின் போது 60 வயதுகளில் உள்ள ஆண், பெண் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹாஸல் ஹில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. வாகனத்தில் இருந்து பணம், 1,75,000 முத்திரையில்லா சிகரெட்டுகள் மற்றும் 18 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக பல குற்றச்சாட்டுகள் இருவருக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகளுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மே 27ஆம் திகதி Antigonish மாகாண நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.