Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றொருவரின் அடையாளத்தை பயன்படுத்தி சுமார் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள ஆடம்பர டிரக்குகள் மற்றும் எஸ்.யூ.வி வாகனங்களை மோசடியாக பெற்ற வழக்கில், ஏற்கனவே சிறையில் கழித்த காலமே தண்டனையாகக் கணக்கிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

பாஸ்குவாலே ஃபொன்ஸோ என்ற 41 வயதுடைய நபர், ஒன்டாரியோவின் பாரி நீதிமன்றத்தில் பல மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை “மிகவும் கருணையுடன் வழங்கப்பட்ட தீர்வு” என நீதிபதி கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையில், ஃபொன்ஸோ ஹாமில்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகியின் அடையாளத்தை பயன்படுத்தி, வாகன விற்பனையகங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாகனங்களை வாங்க முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. போலியான ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு ஆவணங்கள், void cheque போன்ற ஆவணங்களை வழங்கி அவர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2025 பிப்ரவரி மாதம், அலிஸ்டன் பகுதியில் உள்ள எர்னி டீன் செவ்ரோலெட் வாகன விற்பனையகத்தில் சுமார் 110,000 டாலர் மதிப்புள்ள 2025 GMC Sierra pickup truck வாகனத்தை வாங்க ஃபொன்ஸோ முயன்றார். ஆனால் ஆவணங்களில் சந்தேகம் கொண்ட விற்பனையக ஊழியர்கள், உண்மையான அடையாள உரிமையாளரை தொடர்புகொண்டபோது, அந்த நபர் தன்னால் எந்த வாகனமும் வாங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து விற்பனையகம் காவல்துறையை தொடர்புகொண்டது. பின்னர் வாகனத்தை எடுக்க வந்த ஃபொன்ஸோவை நொட்டாவாசாகா OPP அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில், இதற்கு முன்பும் அதே அடையாளத்தைப் பயன்படுத்தி 2024 Ford F-150 Raptor மற்றும் 2024 Cadillac Escalade ஆகிய வாகனங்கள் மோசடியாக பெறப்பட்டதாக தெரியவந்தது. இந்த இரண்டு வாகனங்களின் மதிப்பு மட்டும் சுமார் 350,000 டாலராக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் Ford F-150 Raptor பின்னர் மாண்ட்ரியல் துறைமுகத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட இருந்த shipping container ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் Cadillac Escalade இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் அரசுத் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இணைந்து முன்வைத்த தீர்வின் அடிப்படையில், ஃபொன்ஸோ ஏற்கனவே சிறையில் கழித்த காலமே தண்டனையாகக் கருதப்பட்டது. அவர் 123 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், pre-sentence credit அடிப்படையில் அது 184 நாட்களாக கணக்கிடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி ரேமண்ட் வில்லியம்ஸ், இந்த வழக்கில் “organized crime” தொடர்பு இருக்கலாம் என்ற கவலைகளையும், சமீப ஆண்டுகளில் ஒன்டாரியோவில் அதிகரித்து வரும் வாகனத் திருட்டு சம்பவங்களையும் குறிப்பிட்டார். இருப்பினும், Crown மற்றும் defence இணைந்து முன்வைத்த தீர்வை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஃபொன்ஸோவிற்கு 18 மாதங்கள் probation விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்படாத Cadillac Escalade வாகனத்திற்காக 180,000 டாலர் restitution order-மும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, அடையாள திருட்டு, போலி ஆவணங்கள் மற்றும் ஆடம்பர வாகன திருட்டு தொடர்பான குற்றங்கள் ஒன்டாரியோவில் தொடர்ந்தும் பெரும் சவாலாக இருப்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.