Reading Time: < 1 minute

மனிடோபா- பெலேர் மேன் (Bélair Man) பகுதியில் உள்ள வின்னிபெக் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணமால் போயுள்ளார்.

Tamil Business Directory

ஏரியின் தெற்குப் பரப்பின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் இந்த படகு விபத்து நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

கனடாவிற்கு வருவதற்கு மற்றவர்களுக்கு உதவ பணியாற்றிய ஒரு குர்திஷ் அகதியும் வழக்கறிஞர் ஒருவருமே இந்த விபத்தில் சிக்கியதாக தெரிய வருகின்றது.

42 வயதான நூர் அலி என்பரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நூர் அலி தான் என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கு தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.