Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாறியோ மாகாணத்தின் Brampton இல் உள்ள மருத்துவமனையில் 58 வயதான ஊழியர் பணிபுரிந்து வந்தார்.
அந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த மருத்துவ ஊழியர் உயிரிழந்துள்ளார்.
அவர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக William Osler Health System வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் ஊழியரின் மறைவு வேதனையளிக்கிறது“ எனக் குறிப்பிட்டுள்ளது.




