Reading Time: < 1 minute

கனடாவின் மனிடோபா மாகாணத்தின் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Tamil Business Directory

மனிடோபாவின் முன்னாள் முதல்வர் ஹெதர் ஸ்டெஃபன்சனுக்கு 18,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மாகாண நெறிமுறை ஆணையர் ஜெஃப்ரி ஸ்னூர் (Jeffrey Schnoor) வழங்கிய அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் தண்டனைகளை அங்கீகரித்துள்ளனர்.

அறிக்கையில், 2023 தேர்தலில் பிரோகிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்தபின், புதிய என்.டி.பி. அரசு பதவியேற்கும்முன், ஸ்டெஃபன்சன் ஒரு சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி பெற முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை “பிற மக்களின் நலனுக்காக தவறாகச் செயல்பட்டது” என நெறிமுறை ஆணையர் ஸ்னூர் குற்றம் சுமத்தியுள்ளார். பதவி விலகும் அரசுகள் பெரிய முடிவுகளை எடுக்கக்கூடாது என்ற நீண்டகால சட்டமன்றக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்டெஃபன்சன் தனது செயல் பொது நலனுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்றும், திட்டத்தில் தனிப்பட்ட நலன் எதுவும் இல்லை என்றும், இறுதியில் அந்த சுரங்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது எதிர்க்கட்சியில் உள்ள பிரோகிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சி, என்.டி.பி.யுடன் இணைந்து அறிக்கையை ஆதரித்துள்ளது.

ஆனால், அவர்கள் ஸ்டெஃபன்சனின் அபராதத் தொகையைச் செலுத்த எந்த உதவியும் வழங்கமாட்டோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.