Reading Time: < 1 minute

எட்மண்டனின் குயின் மேரி பார்க் சுற்றுப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tamil Business Directory

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, பலநபர்கள் வாகனத்தில் தப்பியோடியதாகவும், அவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தினத்தன்று 107ஆவது அவென்யூ மற்றும் 117ஆவது வீதி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகாமையில், காலை 7:20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவ சேவையினர், பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 28 வயதான ஆண் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.