Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியா- லாங்லே பகுதியில் இடம்பெற்ற முதியவர் கொலை தொடர்பாக, மனிதக் கொலை புலனாய்வாளர்கள், விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tamil Business Directory

மேலும், கொலை செய்யப்பட்ட 67வயதான முதியவர் டென்னிஸ் ஜான்ஸ்டன் என அதிகாரிகள் அடையாங் கண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இச்சம்பவத்துடன் தொடர்புடையர் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் காவலில் எடுத்ததாகவும், பின்னர் அவரை விடுவித்ததாகவும் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, 224 வீதியின் 2900 தொகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரவு 9:20 மணியளவில் குறித்த முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இவரின் மரணத்தை கொலை என சந்தேககிக்கும் பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.