Reading Time: < 1 minute
Tamil Business Directory
லோவர்மெயிண் லேண்ட்டில் கடந்த 30 மணித்தியாலங்களில் மூன்று பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை, லாட்னர் ட்ரங்க் வீதி மற்றும் ஹார்வெஸ்ட் டிரைவ் சந்திக்கும் இடத்தில் இடம்பெற்ற விபத்து 30வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேபோல, வியாழக்கிழமை கிளியர்ப்ரூக் பகுதியில் பிக்கப் டிரக் வாகனமொன்று மோதிய விபத்தில் 40 வயதான பெண் பாதசாரியொருவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை பிற்பகல் பர்னபியில் வில்லிங்டன் அவென்யூ மற்றும் பெரெஸ்போர்ட் வீதி சந்திப்பில் இடம்பெற்ற விபத்தில் 88 வயதான பெண் உயிரிழந்தார்.




