Reading Time: < 1 minute

கனடா Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்குமென ISEE INITIATIVE அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட GoFundMe நிதிச் சேகரிப்பின் மூலம் 32,913 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிய செலவுகளைத் தாண்டி மீதமுள்ளவை தர்ஷிகா ஜெகநாதனின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இந்தப் பணியைச் செய்த ISEE INITIATIVE அமைப்பினருக்கும், அனைத்து தொண்டர்களுக்கும், பங்களிப்பு செய்த அனைவருக்கும் TorontoTamil.com இன் நன்றிகளும், பாராட்டுக்களும். பல தடைகளைத்தாண்டி இந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள்.

இவரது கொலை குறித்த குற்றச்சாட்டை அவரது முன்னால் கணவனான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் எதிர்கொள்கின்றார். இவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு நடைபெறுகின்றபோதிலும் அது குறித்த விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.