Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றைய தினம் இரவு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் உயிர் காப்பு படையினர் முதலுதவிகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துவிட்டார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை.

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்களையும் போலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

சம்பவ தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.