Reading Time: < 1 minute

கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

வேறும் ஓர் சிறுமியுடன் ஏற்பட்ட மோதலின் போது இந்த சிறுமி கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

டர்ஹம் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆயுத முனையில் சிறுமியொருவர் அச்சுறுத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

சிம்கோ மற்றும் பிரிட்டானியா வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு சிறுமிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சிறுமி கத்தியை கொண்டு மற்றைய சிறுமியை தாக்க முயற்சித்து உள்ளதாகவும் அவரை கத்தியுடன் விரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமிகள் தொடர்பான விபரங்களை எதுவும் வெளியிடப்படவில்லை.

கனடிய சிறுவர் பாதுகாப்பு சட்டங்களின் பிரகாரம் சிறுமியரின் தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.