Reading Time: < 1 minute

மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொலை சம்பவம், பொலிஸாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக, மேற்கு கனடா முழுவதும் இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்கர்களை தேடிவந்த பொலிஸார், வடக்கு மனிடோபாவின் வனப்பகுதியில் கடந்த மாதம் 18 வயதான பிரையர் ஷ்மேகெல்ஸ்கி மற்றும் 19 வயதான காம் மெக்லியோட் ஆகியோரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர்.

சுயமாகத் தாக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்து கிடந்த நிலையிலேயே, இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும், இறப்பதற்கு முன்னர், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக தாவரவியல் விரிவுரையாளரான லியோனார்ட் டிக்கின் கொலை சம்பவத்தில், சந்தேக நபர்களாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

மேலும் அமெரிக்க சின்னா டீஸ் மற்றும் அவரது அவுஸ்ரேலிய காதலன் லூகாஸ் ஃபோலர் ஆகியோரின் மரணத்திலும் சந்தேக நபர்களாக இருந்தனர்.

இந்த ஒட்டுமொத்த கொலை தொடர்பான விசாரணைகளுமே நிறைவுக்கு வராத நிலையில், தற்போது சந்தேக நபர்களின் கொலையும் நிகழ்ந்துள்ளமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.