Reading Time: < 1 minute

பார்ரி (Barrie) நகரின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த தீ விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை நகரின் தெற்கு எல்லையிலுள்ள லிட்டில் அவெனியூவில் உள்ள வீடுகளில் ஏற்பட்டது.

வீடொன்றில் ஏற்பட்ட  தீ இன்னொரு வீட்டுக்கும் பரவிய நிலையில் குறித்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள்  ஏனைய வீடுகளுக்கும் தீ பரவ முன்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீயினால் பொருட்கள் எரிந்துள்ள அழிவடைந்துள்ள போதும், உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறாமல் அங்கிருந்தவர்கள் வெளியெற்றப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.