Reading Time: < 1 minute

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை சில துப்பாக்கிகளும் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இரண்டு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

Williams Parkway மற்றும் Kennedy Roadஇல் உள்ள குறித்த அந்த வீட்டில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து சுமார் 23,000 டொலர்கள் பெறுமதியான ஹொக்கெய்ன் வகை போதைப் பொருள், ஒரு கைத்துப்பாக்கி, ஷொட்கண் வகை துப்பாக்கி ஒன்று, றிவோல்வர் வகைத் துப்பாக்கி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் பிரம்டனைச் சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவரையும், பிரம்டனைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை, கடத்தல் நோக்கத்துடன் போதைப் பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.