Reading Time: < 1 minute

கனடாவின் இட்டோபிகாக் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

தென் இட்டொபிக் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளை கொண்ட வீடு ஒன்று இவ்வாறு தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த நபர் ஒருவரை தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தபோதும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் வேறும் எவருக்கும் காயங்களோ உயிர்சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.