Reading Time: < 1 minute

கனடாவின் மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

பிரிட்டானியா மற்றும் மெக்லாகுடின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனமொன்று மின் கம்பத்தில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மின் கம்பத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.