Reading Time: < 1 minute

கனடாவில் பணி அனுமதி பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.

Tamil Business Directory

வெளிநாட்டு பிரஜைகள் பட்டப்பின் படிப்பு தொடர்பான பணி அனுமதியை பெற்றுக் கொள்ள இனி அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் இவ்வாறு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சில வெளிநாட்டு பிரஜைகள் மோசடியான முறையில் பணி அனுமதியை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தற்காலிகமாக தங்கி இருக்கும் நபர் ஒருவர் பணி அனுமதி பெற்றுக் கொள்வதற்கு குறுக்கு வழிகளை பயன்படுத்துவதனை தடுக்கும் நோக்கில் புதிய தடை நடைமுறைக்கு வர உள்ளது.

தற்காலிகமாக கனடாவில் வசிப்பவர்கள் மாணவர் அனுமதி கல்வி அனுமதி அல்லது பணி செய்வதற்கான அனுமதிக்காக இணையத்தில் விண்ணப்பம் செய்யும் போது ஏற்படக்கூடிய கால தாமதத்தை தவிர்க்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறி பின்னர் இவ்வாறு விண்ணப்பம் செய்கின்றனர்.

இது குடிவரவு நடைமுறைகளை பிழையாக பயன்படுத்தும் ஓர் செயல்முறை என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த சிக்கலை தவிர்க்கும் நோக்கில் எல்லை பகுதியில் பணி செய்வதற்கான அனுமதி கூறி விண்ணப்பிப்பதனை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.