Reading Time: < 1 minute

கனடாவில் மூன்று பெண்களை பாலியல் ரீதியாக துன்புறத்திய டாக்ஸி சாரதி ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ரொறன்ரோவைச் சேர்ந்த சாரதியான 38 வயதான தானீம் அஸீஸ் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாக்ஸியில் வைத்து இவ்வாறு பெண்களை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தியுள்ளார்.

ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவில் தனியாக வீடுகளுக்கு செல்வதற்காக டாக்ஸியில் பயணித்த இளம் பெண்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பாலியல் தாக்குதல்களினால் குறித்த இளம் பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.