Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tamil Business Directory

அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பெப்ரியோ டி சொய்சா என்ற சந்தேக நபருக்கு எதிராக 6 கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இவான் லிட்டில், ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் சர்வதேச மாணவராக கனடாவில் கல்வி பயின்று வந்த டி சொய்சா, அடுத்த வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 35 வயதான தர்ஷனி ஏகநாயக்க மற்றும் அவரது இரண்டு மாதங்கள் முதல் ஏழு வயது வரையான நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் நண்பர் ஒருவரை இளைஞன் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.