Reading Time: < 1 minute

அமெரிக்கா – கனடாவின் வடகிழக்கே ஹட்சன் பே (Hudson Bay) பகுதியிலுள்ள பனிக்கரடிகளின் உணவுப் பழக்கம் மாறுகிறது.

Tamil Business Directory

பெரும்பாலான பனிக்கரடிகளின் உடல் எடை வெகுவாகக் குறைந்துள்ளது.

நிலப்பகுதிகளில் சில பனிக்கரடிகள் நிறைய உணவுவகைகளைக் கண்டுபிடிக்கின்றன.

பெர்ரி பழங்கள், முட்டைகள், கடல் பறவைகள், மலை மான்கள் என ஏராளம்.

அதற்குப் பனிக்கரடிகள் நிறைய சிரத்தையும் எடுக்கவேண்டும்.

ஆனால் அவை கண்டெடுக்கும் உணவோ பொருத்தமானதாக இருப்பதில்லை.

ஆய்வு செய்யப்பட்ட 20 பனிக்கரடிகளில் 19 கரடிகளின் எடை மூன்று வாரங்களில் சராசரியாக 21 கிலோகிராம் குறைந்திருந்தது.

1980களுடன் ஒப்பிடுகையில் இப்போது பனிக்கரடிகள் மூன்று வாரகாலம் கூடுதலாக நிலத்தில் செலவிடுகின்றன.

பனிக்கட்டிகள் உருகிக் குறைந்துவருவது இதற்குக் காரணம்.