Reading Time: < 1 minute
Tamil Business Directory
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.
அதற்கமைய, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 சதவீத அதிகரிப்பு என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.




