Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீது பலஸ்தீன முஸ்லிம் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

கனடிய முஸ்லிம்களுக்கான தேசிய பேரவை இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு ட்ரூடோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் பிரதமருடனான சந்திப்பினை ரத்து செய்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ட்ரூடோவுடனான சந்திப்பில் எவ்வித பயனும் கிடைக்க்ப போவதில்லை என பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவன் பிறவுண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காசா போரின் போது பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கு கனடா உரிய பங்களிப்பினை செய்யத் தவறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பிரதமரை சந்திப்பதில் பயனில்லை எனவும் இதனால் சந்திப்பினை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.