Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளது.

Tamil Business Directory

கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த குடும்பத்தினர் பரிசு வென்றுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த குடும்பத்திற்கு பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. நான்சி காவுத்தியர் குடும்பத்தினர் இவ்வாறு பெருந்தொகை ஜாக்பொட் பரிசினை வென்றுள்ளனர்.

வீடு ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நான்சி குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக கியூபெக் மாகாண மக்கள் கூடுதல் அளவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.