Reading Time: < 1 minute

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனா தொடர்தும் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற சீனா அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சீனா அரசாங்கம் 155 மில்லியன் ரூபாயை வடக்கு மாகாணததிற்கு ஒதுக்கியுள்ளது என்றும் அதில் நிவாரணப் பொதிகள் வழங்குவது மட்டுமன்றி மீன்பிடி வலைகள் பெறுவதற்கும் பயன்படுத்துவதாகவும் மிகுதிப் பணத்தில் வடமாகாணத்தில் வீடு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மேலும் தெரிவித்துள்ளார்.