Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பணவீக்க வீதம் மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது.
மீண்டும் நாட்டில் பணவீக்கம் உயர்வடைந்து செல்வதாக பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் பணவீக்க வீதம் இரண்டு தசம் எட்டு ஆக காணப்பட்டது.
அதன் பின்னர் அடுத்த இரண்டு மாதங்களிலும் தொடர்ச்சியாக பணவீக்கம் உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் வட்டி வீதங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.




