Reading Time: < 1 minute

கனடாவில் மொன்றியல் பகுதியில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

56 வயதான தாயும் 12 வயதான மகளும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு பேரின் சடலங்களும் கண்டடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன.

மொன்றியலின் டெராசே பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அதிகாலை வேளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போது சலனமற்ற இரண்டு உடல்களை அவதானித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போதும் இரண்டு பேரும் உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீட்டில் ஆணரொருவரும் இரண்டு சிறுமியரும் அவர்களது தாயாரும் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மொன்றியல் பகுதியில் இந்த ஆண்டில் இதுவரை இடம் பெற்ற 18 ஆவது படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படுகொலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக விடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.