Reading Time: < 1 minute

கனடாவில் நாய் கடிக்கு இலக்காகி ஒருவர் பேர் படுகாயம் அடைந்துள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் ஒஷாவா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியில் நாய் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயம் அடைந்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்ஹம் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஒஷாவாவின் அடிலைட் மற்றும் மேரி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மேலும் இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தாக்குதல் மேற்கொண்ட நாய் மிருக கட்டுப்பாட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக கனடாவின் சில பகுதிகளில் இவ்வாறு நாய் கடியினால் காயமடைந்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.