Reading Time: < 1 minute

கனடாவில் மார்க்கம் பகுதியில் லோடு செய்யப்பட்ட இரண்டு கைதுப்பாக்குகளுடன் வாகனம் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

இந்த பெண்ணின் வாகனத்தில் பல்வேறு வகையான போதை பொருட்களும் மீட்கப்பட்டதாக யோர்க் போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை நிற பிக்கப் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து சந்தேகம் எழுந்த பொலிசார் குறித்த வாகனத்தை சோதனை இட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு லோட் செய்யப்பட்ட தானியங்கி கை துப்பாக்கிகளும் துப்பாக்கி தோட்டாக்களும் போதை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

33 வயதான அமாடா லொலென்டா காமாகோசோ என்ற பெண்ணே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணுக்கு எதிராக போலீசார் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.