Reading Time: < 1 minute

கனடாவின் பிக்கரிங் பகுதியில் பல வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

401 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

தீ பற்றி கொண்ட வாகனங்களின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு படையினர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் பாரியளவில் தீ பற்றி எரிவதாகவும் கருப்பு புகை பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில சாரதிகள் அந்தப் பகுதியில் வெடிப்புச் சத்தங்களை கேட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த விபத்து சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய விவரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எத்தனை வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன? எதனால் இந்த விபத்து ஏற்பட்டது ? என்பது போன்ற விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.

எவ்வாறுஎனினும் சில டேங்கர்கள் தீப்பற்றி எரிவதாக ஒன்றாறியோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீதியில் குறிப்பிடத்தக்களவு தீ பற்றி கொண்டுள்ளதாகவும் வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகவும் பொலிஸார்தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக 41 ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.