Reading Time: < 1 minute

கனடாவின் வடக்கு பகுதியில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Tamil Business Directory

வழமையாக ஆண்டின் இந்தக் காலப் பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பநிலை
சில பகுதிகளின் வெப்பநிலை தொடர்பிலான பதிவுகள் இந்த மாதம் மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான்,மானிடோபா, வடமேற்கு பகுதிகள் என்பனவற்றில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அல்பர்ட்டாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் கனடிய சுற்றாடல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் வழமையை விடவும் குறைந்தளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.