Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் நபர் ஒருவர் சராமாரி கத்தி குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Tamil Business Directory

இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று ரொறன்ரோவின் மேற்கு பகுதியான ருனிமேட் மற்றும் எனட்டீ வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதமொன்றினால் நபர் ஒருவர் எழுமாறான அடிப்படையில் நபர்களை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்களுக்கு உயிராபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அது குறித்து றொரன்டோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.