Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்திய கணர், மனைவியை அடுத்துகொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை, அவரது கணவர் 48 வயதான இந்தர்ஜித் சாந்து என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மரணமடைந்த கமால்ஜித் சாந்து என்பவருக்கு 16 மற்றும் 21 வயதில் இரு பிள்ளைகள் உள்ள நிலையில் , அவர்கள் தற்போது உறவினர்கள் அரவணைப்பில் உள்ளனர் எனவும் Abbotsford பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கனடாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 88 பெண்கள் அல்லது பெண் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், பெரும்பாலும் குடும்ப வன்முறை மற்றும் ஆண்களே கொலைக்கு காரணமாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.