Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் TTC பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பலர் காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

ரொறன்ரோவில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சாலை விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வில்சன் அவென்யூ மற்றும் சாம்ப்ளைன் பவுல்வர்டு பகுதியில் பேருந்து ஒன்றுடன் கார் ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதாகவே கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த விபத்தில் பேருந்துக்கும் பங்கு உள்ளதா என்பதில் தற்போது தெளிவான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் வெளியிட்ட தகவலில், குறித்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 18 வயதுடைய ஒருவர் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

லேசான காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டு, அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் மேலதிக தகவல்கள் உரிய விசாரணைகளுக்கு பின்னர் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.