Reading Time: < 1 minute

கனடாவில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வெப்பமான காலநிலை காரணமாக அதிகளவில் வயது முதிர்ந்தவர்களே உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (செவ்வாய்க்கிழமை) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் இந்த வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.