கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Waverley புறநகர் பகுதியில் வசிக்கும் Stephen Tuck மற்றும் Cynthia Tuck தம்பதியினர், Atlantic Lottery நிறுவனத்தின் Set for Life எனும் விளையாட்டில் பெரும் பரிசை வென்றுள்ளனர்.
வெறும் 4 டாலர் மதிப்பிலான இந்த லாட்டரி சீட்டு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளையாட்டின் விதிகளின்படி, வெற்றியாளர்களுக்கு இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டன. ஒன்று, அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாரந்தோறும் 1,000 டாலர்கள் பெறுவது; மற்றொன்று, ஒருமுறை மொத்தமாக 675,000 டாலர்களைப் பெறுவது.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, தம்பதியினர் மொத்தத் தொகையான 675,000 டாலர்களை ஒருமுறையாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இந்த வெற்றி, சிறிய முதலீட்டில் கூட வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.