Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா நகரில் கொல்லப்பட்ட இலங்கையர் ஆறுபேரில் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(40) என்பவர் கனடாவிற்கு வந்து இரண்டுமாதங்களே என தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

இவர் தனது நண்பரான தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்தை வளப்படுத்தும் வகையில்
தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை வளப்படுத்தும் வகையில் கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள Amarakoon Mudiyanselage முயற்சித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.இது அவரது மனைவி , பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.