Reading Time: < 1 minute

ஹலிஃபக்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, 27 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

200 தொகுதி – ஹெர்ரிங் கோவ் வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 5:13 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 48 வயதான ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மீது இதுவரை எந்தக்குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.