Reading Time: < 1 minute

நேற்று மதியத்திற்கு சற்று முன்னதாக றிவர்டேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த பதின்மவயது சிறுவன் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Danforth Avenueவிற்குத் தெற்கே, Pape Avenue மற்றும் Strathcona Avenue பகுதியில் நேற்று முற்பகல் 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகி உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் கூறப்படுகிறது.

Earl Grey பாடசாலைக்கு அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பாடசாலைக்கான போக்குவரத்துகளைத் தடை செய்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், பாதுகாப்புக்காக அவ்வாறு செய்யப்பட்டதாகவும், அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்தச் சம்பவத்திற்கும் பாடசாலைக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.