Reading Time: < 1 minute

வோன் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதுண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கிங்க் வோன் வீதி மற்றும் Pine Valley Drive பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் காயங்களுடன் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் வைத்தியலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டதாகவும், மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.