Reading Time: < 1 minute

ஓக்வுட் – வோன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்கள் மவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஓக்வுட் அவனியு மற்றும் வோன் வீதிப் பகுதியில் உள்ள மதுபாண விடுதி ஒன்றுக்கு வெளியே, நேற்று அதிகாலை 2:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓக்வுட் அவனியுவில் உள்ள “Greens Bar and Restaurant” எனப்படும் அந்த மதுபான விடுதிக்கு வெளியே உள்ள வீதியோர நடைபாதையில் நின்று கொண்டிருந்த வேளையில் இந்த இரண்டு பெண்களும் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவர்களை அவசர மருத்துவப் பிரிவினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு பலரும் இருந்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.