Reading Time: < 1 minute
Tamil Business Directory
இந்த விடுமுறை காலத்தில் உங்கள் வீட்டில் இல்லாத ஒருவருடன் நீங்கள் வீட்டுக்குள் இருக்கும்போது மருத்துவமற்ற முகக்கவசத்தை அணிய நாட்டின் உயர்மட்ட மருத்துவர் டாம் தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் மற்றும் விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து விவாதிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் நாங்கள் வீட்டிற்குள் செல்லும்போது, கொவிட்-19 இன் பரவலை அதிகரிக்கக்கூடும்.
வெளியில் உள்ளவர்களுடன் நேரம் செலவிட்டு பின்னர், உங்கள் வீட்டுக்கு சென்றால், வீட்டுக்குள் நேரம் செலவிடும்போது அனைவரும் மருத்துவமற்ற முகக்கவசத்தை அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
எப்போதும் இரண்டு மீட்டர் தூரத்தை வைத்திருக்காமல் விடுமுறை கொண்டாட்டங்கள் போன்ற நிதானமான அமைப்புகளில் நமது பாதுகாப்பைக் குறைக்க முடியாது’ என கூறினார்.




