Reading Time: < 1 minute

கனடாவின் றொரன்டோ பகுதியில் ஒர் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி விலை மிக அதிகம் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

லொப்லோவ்ஸ் என்னும் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சி வகைகளின் விலை வெகு அதிகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிக்கன் பிரெஸ்ட் பகுதிகளைக் கொண்ட ஒரு கிலோ கோழி இறைச்சி 27 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு குறித்து வாடிக்கையாளர் ஒருவர் டுவிட்டரில் இட்ட பதிவு வைரலாகியுள்ளது.

விலை அதிகரிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர்களும் டுவிட் பதிவுகளை இட்டுள்ளனர்.

பிரிமியம் தரம் வாய்ந்த கோழி இறைச்சி இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கனடாவில் இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.