Reading Time: < 1 minute

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் 5875 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 40 வீத அதிகரிப்பாகும்.

கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் வீடு விற்பனை இரண்டு வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வீடுகளின் விற்பனை விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 2.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.