Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோவின் மவுன்ட் டென்னிஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

வாகனமொன்றில் இருந்தவர்கள் மீது மற்றுமொரு வாகனத்தில் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.