Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோவில் நேற்று (09-08-2022) அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ரொறன்ரோவின் லோரன்ஸ் அவன்யூ மற்றும் வெஸ்டன் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகிய இருவரை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய எவ்வித விபரங்களும் வெளியிடப்படவில்லை.




