Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொக்கி மவுண்டன் ஹவுஸ் அருகே இரு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாக எட்மண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை 11 இற்கு அருகாமையில் சன்சைல்ட் சுற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நெடுஞ்சாலை 11இல் கிழக்கு தடம் நோக்கிச் சென்ற ஒரு பிக்ப் ரக வாகனம், எதிரே வந்த டிராக்டரை மோதியதாக பொலிஸார் நம்புகின்றனர்.
இவ் விபத்தில், உயிரிழந்தவர் 41வயதான பெண் எனவும், இவர் மட்டுமே குறித்த வாகனத்தில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார், தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




